/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலிடெக்னிக் கல்லுாரியில் 67வது ஆண்டு விழா
/
பாலிடெக்னிக் கல்லுாரியில் 67வது ஆண்டு விழா
ADDED : ஏப் 24, 2024 09:44 PM
பொள்ளாச்சி : நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரியில், 67வது ஆண்டு விழா நடந்தது. கல்லுாரி மாணவர் சேவை மன்ற தலைவர் நிரஞ்சன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் அசோக், ஆண்டறிக்கை வாசித்தார்.
கோவை ஜே.சி.டி., பொறியியல் கல்லுாரி முதல்வர் மனோகரன், பேச்சாளர் முத்துக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவில், கல்வி மற்றும் அது சார்ந்த பிற துறைகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் செயலாளர் ராமசாமி, மகாலிங்கம் பொறியியல் தொழில் நுட்பக் கல்லுாரி முதல்வர் கோவிந்தசாமி, கல்லுாரி முன்னாள் மாணவர் சங்க பிரதிநிதிகள், துறைத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கல்லுாரி மாணவர் சேவை மன்றச் செயலாளர் தஸ்லிமாபேகம் நன்றி கூறினார்.

