/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் 400 பேர் ஹஜ் யாத்திரை; பயணிகளுக்கு பயிற்சி முகாம்
/
கோவையில் 400 பேர் ஹஜ் யாத்திரை; பயணிகளுக்கு பயிற்சி முகாம்
கோவையில் 400 பேர் ஹஜ் யாத்திரை; பயணிகளுக்கு பயிற்சி முகாம்
கோவையில் 400 பேர் ஹஜ் யாத்திரை; பயணிகளுக்கு பயிற்சி முகாம்
ADDED : ஏப் 24, 2024 10:11 PM
கோவை: கோவை மாவட்டத்தில் இருந்து, 400 பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள உள்ளனர். அவர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
மத்திய, மாநில அரசுகளின் ஹஜ் கமிட்டி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்களின் முக்கிய பயணமான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில், 5,637 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு விமானக் கட்டணம் உட்பட போக்குவரத்து செலவு, தங்கும் விடுதி கட்டணம், உணவுக்கான செலவு என ரூ.3.75 லட்சம் வரை செலவாகிறது.
இதில் அரசு சலுகை மற்றும் மானியமாக ரூ.45 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நாளை, (26ம் தேதி) முதல் ஜூன், 9ம் தேதி வரை, 17 கட்டங்களாக ஹஜ் பயணிகள் விமானங்களில் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். அவர்களுடன் அனுபவமிக்க தன்னார்வலர்களும் செல்கின்றனர். அனைவருக்கும் வழிகாட்டு நெறிமுறை புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. இதில், கோவை மாவட்டத்தில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட, 400 பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், கோவை கரும்புக்கடை பகுதியில், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மற்றும் ஷம்சுல் இஸ்லாம் ஹனபி ஜமாத் சார்பில், 23வது ஆண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு புத்தறிவு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், ஹஜ் பயணம் சென்று திரும்பி வரும் வரை கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, விளக்கம் அளிக்கப்பட்டது.

