/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
3 நாட்களில் 2,541 தபால் ஓட்டுகள் பதிவு; விருப்பம் தெரிவித்தோரில் 111 பேர் ஓட்டளிக்கவில்லை
/
3 நாட்களில் 2,541 தபால் ஓட்டுகள் பதிவு; விருப்பம் தெரிவித்தோரில் 111 பேர் ஓட்டளிக்கவில்லை
3 நாட்களில் 2,541 தபால் ஓட்டுகள் பதிவு; விருப்பம் தெரிவித்தோரில் 111 பேர் ஓட்டளிக்கவில்லை
3 நாட்களில் 2,541 தபால் ஓட்டுகள் பதிவு; விருப்பம் தெரிவித்தோரில் 111 பேர் ஓட்டளிக்கவில்லை
ADDED : ஏப் 11, 2024 12:26 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், வீட்டில் இருந்தவாரே, முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என, மொத்தம், 2,541 பேர் தபால் ஓட்டுப்பதிவு செய்தனர்.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், வால்பாறை, கிணத்துக்கடவு மற்றும் தொண்டாமுத்துார் சட்டசபை தொகுதிகள் உள்ளன.
லோக்சபா தொகுதியில், ஆண்கள், 7,66,077, பெண்கள், 8,15,428 மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள், 290 என மொத்தம், 15 லட்சத்து, 81 ஆயிரத்து, 795 வாக்காளர்கள் உள்ளனர். நகரப்பகுதியில், 821, கிராமப்புற பகுதியில், 880 என மொத்தம், 1,701 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
இந்நிலையில், லோக்சபா தேர்தலில், 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே தங்களது ஓட்டுக்களை அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்டோர், 15,720 பேர், மாற்றுத்திறனாளிகள், 9,414 பேரும் உள்ளனர். வீட்டில் இருந்து தபால் ஓட்டு போட விருப்பம் உள்ளதா என கேட்டறியப்பட்டது.
அதில், 2,085 முதியவர்கள், 567 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம், 2,652 பேர் விருப்பம் தெரிவித்தனர். இவர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு கடந்த, 5ம் தேதி துவங்கியது.
கடந்த, 5, 6 மற்றும், ஒன்பதாம் தேதிகளில் இந்த தபால் ஓட்டுப்பதிவு முதற்கட்டமாக நடைபெற்றது. அதில், பலரும் ஆர்வமாக தங்களது ஓட்டுக்களை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றினர்.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளில் விருப்பம் தெரிவித்தவர்களின் வீடு தேடிச் சென்று, தபால் ஓட்டுப்பதிவு துவங்கியுள்ளது. முதல் கட்டமாக மூன்று நாட்கள் நடைபெற்றன.தினமும், காலை, 8:00 மணிக்கு இக்குழு சப் - கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு, வீடு, வீடாக சென்று தபால் ஓட்டுக்களை பதிவு செய்தனர்.
தொடர்ந்து, தபால் ஓட்டு பெட்டிகள், சப் - கலெக்டர் அலுவலகம் கொண்டு வரப்பட்டு, அங்கு இருந்து தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்துக்கு கொண்டு சென்று பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.
கடந்த, மூன்று நாட்களாக நடந்த ஓட்டுப்பதிவில், 85 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில், 1,987 பேர்; மாற்றுத்திறனாளிகள், 554 பேர் ஓட்டுப்பதிவு செய்தனர். வீடுகளில் இருந்து தபால் ஓட்டு போட விருப்பம் தெரிவித்த, 2,652 பேரில், 2,541 பேர் ஓட்டு அளித்தனர். மற்ற, 111 பேர் ஓட்டு அளிக்கவில்லை. இவர்களுக்கு மாற்று தேதி தேர்தல் ஆணையம் அறிவித்ததும் ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.
இவ்வாறு, கூறினர்.

