/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மத்திய சிறையில் இருந்து 16 கைதிகளுக்கு விடுதலை!
/
மத்திய சிறையில் இருந்து 16 கைதிகளுக்கு விடுதலை!
ADDED : மார் 28, 2024 05:18 AM

கோவை, : கோவை மத்திய சிறையில் நடந்த மெகா அதாலத் நீதிமன்ற முகாமில், 16 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வாயிலாக, சிறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளின் வழக்குகளுக்கு தீர்வு காண, சிறை அதாலத் நேற்று நடந்தது.
இதில், கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு உட்பட்ட வழக்குகளை, ஜே.எம்., 5 மாஜிஸ்திரேட் சந்தோஷ், ஜே.எம்., 6 மாஜிஸ்திரேட், சுனில் வினோத், ஆகியோர், 18 கைதிகளின், 21 வழக்குகளுக்கு தீர்வு கண்டனர்.
திருப்பூர் மாவட்ட நீதிமன்றங்களுக்கு உட்பட்ட வழக்குகளை, திருப்பூர் ஜே.எம்., 4 மாஜிஸ்திரேட், முருகேசன், 3 கைதிகளின் மூன்று வழக்குகளுக்கு தீர்வு கண்டார்.
சிறை அதாலத் நீதிமன்றம் வாயிலாக, 21 கைதிகளின், 24 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 16 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்ட நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது, பவானி ஜே.எம்., 1 மாஜிஸ்திரேட் பரத்குமார், நீலகிரி மாவட்ட நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது, கோத்தகிரி, மாஜிஸ்திரேட் வனிதா ஆகியோர் உடனிருந்தனர்.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சிவா துவக்கி வைத்தார். சிறை எஸ்.பி., செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

