/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கஞ்சா, போதை மாத்திரை வைத்திருந்த வாலிபர் கைது
/
கஞ்சா, போதை மாத்திரை வைத்திருந்த வாலிபர் கைது
ADDED : டிச 22, 2025 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில், நேற்று சந்தேகத்தின் படி நின்ற வாலிபரிடம் விசாரித்தபோது, அவர் வைத்திருந்த பையில், கஞ்சா மற்றும் போதைக்காக பயன்படுத்தும் மாத்திரைகள் இருந்தன.
அடையாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், தி.நகர், பிள்ளை தோப்பு பகுதியை சேர்ந்த கரண், 25, என தெரிந்தது.
அவரை கைது செய்த போலீசார், விற்பனைக்காக வைத்திருந்த, 1.5 கிலோ கஞ்சா மற்றும் 2,240 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

