ADDED : டிச 28, 2025 05:29 AM

கண்ணகி நகர்: கண்டிகையை சேர்ந்த, 57 வயது பெண், ஓ.எம்.ஆர்., ஒக்கியம்பேட்டையில் உள்ள ஒரு மொபைல் ஷோரூமில் துப்புரவு ஊழியராக பணிபுரிகிறார். கடந்த 1ம் தேதி, ஷோரூம் ஷட்டரை திறக்க, சாலையில் சென்ற, 34 வயது மதிக்கத்தக்க நபரை உதவிக்கு அழைத்தார்.
ஷட்டரை திறந்து கொடுத்த அந்த நபர், ஷோரூமுக்குள் பெண்ணை தள்ளி ஷட்டரை பூட்டினார். பின், கீழே விழுந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, பாலியல் சீண்டல் செய்துள்ளார். பின், வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என, கூறி தப்பினார்.
புகாரின்படி, கண்ணகி நகர் போலீசார் வாலிபரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று ஓ.எம்.ஆரில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த அந்த நபரை பார்த்த அப்பெண், போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சென்று அவரை பிடித்து விசாரித்ததில், கந்தன்சாவடியை சேர்ந்த சந்துரு, 34, என தெரிந்தது. இவர் மீது, ஏற்கனவே பலாத்காரம், பாலியல் சீண்டல், வழிப்பறி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

