/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடிகால் பணிக்காக தோண்டிய பள்ளம் வெளியே வரமுடியாமல் பெண்கள் தவிப்பு
/
வடிகால் பணிக்காக தோண்டிய பள்ளம் வெளியே வரமுடியாமல் பெண்கள் தவிப்பு
வடிகால் பணிக்காக தோண்டிய பள்ளம் வெளியே வரமுடியாமல் பெண்கள் தவிப்பு
வடிகால் பணிக்காக தோண்டிய பள்ளம் வெளியே வரமுடியாமல் பெண்கள் தவிப்பு
ADDED : மார் 13, 2024 12:28 AM

மடிப்பாக்கம், பெருங்குடி மண்டலம், வார்டு 187க்கு உட்பட்ட மடிப்பாக்கத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, பல மாதங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில், கார்த்திகேயபுரம் பகுதியில் சில நாட்களுக்கு முன், வடிகால் பணிகள் துவங்கின.
கார்த்திகேயபுரம் நான்காவது தெருவோரம் வடிகால் அமைக்க, நேற்று முன்தினம் இரவு பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பள்ளத்தால், வீடுகளுக்கும், சாலைக்கும் இடையே இணைப்பு துண்டிக்கப்பட்டதால், வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் அப்பகுதி வாசிகள் அவதியடைந்தனர்.
நேற்று காலை வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் மாணவர்கள் வெளியில் வர முடியாமல் தவித்தனர்.
இதை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த சிலர், பலகை ஒன்றை ஏற்பாடு செய்து, வீட்டிற்குள் இருந்த மாணவர்கள், பெண்கள் உள்ளிட்டோரை மீட்டனர். தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், நடந்த தவறுக்கு மக்களிடம் வருத்தம் தெவித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'இந்த பணியை முழுமையாக முடிக்காமல் வேறு பணியை துவக்கக்கூடாது. இனி, இதுபோன்று அலட்சியமாக பணி செய்யக்கூடாது என, வடிகால் பணி ஒப்பந்ததாரரை எச்சரித்துள்ளோம்' என்றனர்.