/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழைக்காக காத்திருக்கிறோம் அமைச்சர் நேரு பேட்டி
/
மழைக்காக காத்திருக்கிறோம் அமைச்சர் நேரு பேட்டி
ADDED : நவ 13, 2024 10:26 PM
சென்னை:ஓட்டேரி நல்லா கால்வாய், அம்பேத்கர் பாலம், பேசின் பிரிட்ஜ், விருகம்பாக்கம் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை, நகராட்சி நிர்வாகத் துறை நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டி:
எவ்வளவு பெரிய மழை வந்தாலும், சமாளிக்கக்கூடிய அளவுக்கு, மாநகராட்சி தயாராக உள்ளது.
இதுவரை சென்னையில் எந்த இடத்திலும் மழைநீர் தேங்கவில்லை. விழுந்த ஒரு மரமும் அகற்றப்பட்டுவிட்டது.
மழையின் போது, மாநகராட்சியோடு சேர்ந்து, மீட்பு பணியில் ஈடுபட 18,500 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். அனைத்திற்கும் நாங்கள் தயார் நிலையில் உள்ளோம். இனி, மழை தான் வரவேண்டும்.
ஓட்டேரி நல்லா கால்வாயை தொடர்ந்து விருகம்பாக்கம் கால்வாயிலும் துார்வாரும் பணி நடந்து வருகிறது விரைவில் அது முடியும். முன்னெச்சரிக்கையாக சென்னை முழுக்க கொசு மருந்தும் அடிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

