/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செம்மொழி பூங்காவில் காய்கறி, பழங்கள் விற்பனை
/
செம்மொழி பூங்காவில் காய்கறி, பழங்கள் விற்பனை
ADDED : மே 01, 2025 12:22 AM
சென்னை, மே 1-
சென்னை கதிட்ரல் சாலையில் உள்ள, செம்மொழி பூங்கா வளாகத்தில், 'நம்ம சென்னை நம்ம சந்தை' அங்காடியில், தினமும் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, தினமும காய்கறி, பழங்கள் விற்பனை நடக்கிறது.
சில மாவட்டங்களுக்கே உரிய, பிரசித்தி பெற்ற காய்கறிகள், பழங்கள் விற்கப்படுகின்றன. செங்காம்பு கறிவேப்பிலை, வெள்ளை பாகல், முள் சீத்தாப்பழம், நெல்லி, மஞ்சள் பூசணி, சர்க்கரைவள்ளி கிழங்கு, சப்போட்டா, பப்பாளி, திண்டுக்கல் ரோஸ் ஆப்பிள், மலைப்பூண்டு, பச்சை பட்டாணி, முருங்கை பீன்ஸ், அவகாடோ, கொடைக்கானல் சவ்சவ், கன்னியாகுமரி நேந்திரன், செவ்வாழை, மட்டி வாழை, தேன், இலவங்கம், பட்டை விற்கப்படுகின்றன.
தேனி பன்னீர் திராட்சை, தக்காளி, கோவைக்காய், புளியங்குடி எலுமிச்சை, பாவூர்சத்திரம் வெண்டை, தென்காசி வெள்ளைக்கத்தரி, சேலம் வெண்டை, பிரண்டை, விருதுநகர் கொடுக்காப்புளி, நீலகிரி கேரட், சிவப்பு முட்டைகோஸ், புரோக்கோலி என, பல்வேறு மாவட்ட காய்கறிகள், பழங்கள் விற்கப்படுகின்றன.
இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

