ADDED : பிப் 07, 2024 12:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் மேற்பார்வையில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்புத்துறை மற்றும் சிறைக் காவலர் பணிகளுக்கான தேர்வு நேற்று முன்தினம் முதல் துவங்கி, ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.
ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல் இரண்டாம் அணி ஆயுதப்படை மைதானத்தில் தேர்வு நடக்கிறது. சான்றிதழ்கள் சரிபார்ப்பு, 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம் 400 மீட்டர் ஓட்டம், உயரம் அளவிடுதல், பந்து எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட தேர்வுகள் நடக்கின்றன.

