/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அண்ணா நகரில் போக்குவரத்து மாற்றம்
/
அண்ணா நகரில் போக்குவரத்து மாற்றம்
ADDED : மார் 10, 2024 12:21 AM
சென்னை, போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
அண்ணா நகரில், ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி, மார்ச் மாத அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்க உள்ளன. இதனால், புளூஸ்டார் சந்திப்பு முதல் 2வது நிழற்சாலை - 3வது பிரதான சாலை சந்திப்பு வரையில் நடைபெற உள்ளதால் காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளன.
திருமங்கலத்திலிருந்து அண்ணா நகர் ரவுண்டானா, சிந்தாமணி நோக்கி செல்லும் வாகனங்கள் புளூஸ்டார் சந்திப்பில், 5வது நிழற்சாலையில் இடது புறம் திரும்பி, 6வது நிழற்சாலை வழியாக சிந்தாமணி செல்லலாம்.
போக்குவரத்து மாற்றங்கள் குறிப்பிட்ட நேரங்கள் மட்டுமே செயல்படுத்தப்படும். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு தருமாறு சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

