/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நுழைவாயில்களை மூட எதிர்ப்பு வியாபாரிகள் போராட்டம்
/
நுழைவாயில்களை மூட எதிர்ப்பு வியாபாரிகள் போராட்டம்
ADDED : நவ 21, 2024 12:19 AM

கோயம்பேடு, கோயம்பேடு சந்தையில், 7 முதல் 14 வரை உள்ள நுழைவாயில்கள், காய்கறி சந்தை பகுதியாக உள்ளன.
இந்த நுழைவாயில்களை, அங்காடி நிர்வாக குழு, தினமும் மதியம் 2:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை மூடி வைத்து, சுத்தம் செய்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வெங்காய லாரிகள் வந்தபோது, நுழைவாயில்கள் மூடப்பட்டிருந்தன.
இதை கண்டித்து, ஏ.பி.ஜே., அப்துல் கலாம் கோயம்பேடு வியாபரிகள் சங்க தலைவர் நெல்லை கண்ணன் மற்றும் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் ஆகியோர் தலைமையில் சங்கத்தினர், நுழைவாயில் எண்: 7 அருகே இரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த கோயம்பேடு போலீசார் மற்றும் அங்காடி நிர்வாக குழு முதன்மை நிர்வாக அதிகாரி இந்துமதி ஆகியோர், அவர்களிடம் சமரசம் பேசினர்.
அத்துடன், 'எந்த நேரத்தில் நுழைவாயில்களை மூடி சுத்தம் செய்தால் உங்களுக்கு வசதியாக இருக்கும்' என கேட்டறிந்த அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

