தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வழிப்பறி திருடர்கள் மூவர் கைது

வழிப்பறி திருடர்கள் மூவர் கைது

வழிப்பறி திருடர்கள் மூவர் கைது


ADDED : மே 12, 2025 01:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2025 01:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வளசரவாக்கம்:போரூர் அடுத்த காரம்பாக்கம், காவேரி நகரைச் சேர்ந்தவர் ஜெகன், 21. இவர், அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் பணிபுரிகிறார்.

கடந்த 9ம் தேதி இரவு பணி முடித்து வீட்டிற்கு நடந்து சென்றார். காரம்பாக்கம் பிராமணர் தெரு வழியாக சென்றபோது, 'ஹோண்டா டியோ' இருசக்கர வாகனத்தில் வந்த அவருக்கு அறிமுகமான சுரேஷ் மற்றும் இரு நபர்கள், ஜெகனை வழிமறித்து பணம் கேட்டனர்.

ஜெகன் பணம் தர மறுக்கவே, மூவரும் சேர்ந்து அவரை தாக்கி, 400 ரூபாய் பறித்து சென்றனர்.

இது குறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரித்தனர். இதில், காரம்பாக்கம் 1வது தெருவைச் சேர்ந்த சத்திய மூர்த்தி, 29, ஏழுபிடாரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விக்னேஷ், 27, மற்றும் காவேரி நகரைச் சேர்ந்த சுரேஷ், 29, ஆகிய மூவரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், விக்னேஷ் மீது ஏற்கனவே கொலை முயற்சி உட்பட 2 வழக்குகள் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us