/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சத்தியமூர்த்தி நகர் சந்திப்பில் சிக்னல் இல்லாததால் சிக்கல்
/
சத்தியமூர்த்தி நகர் சந்திப்பில் சிக்னல் இல்லாததால் சிக்கல்
சத்தியமூர்த்தி நகர் சந்திப்பில் சிக்னல் இல்லாததால் சிக்கல்
சத்தியமூர்த்தி நகர் சந்திப்பில் சிக்னல் இல்லாததால் சிக்கல்
ADDED : நவ 12, 2024 12:37 AM
மணலி விரைவு சாலை மற்றும் சத்தியமூர்த்தி நகர் - கலைஞர் நகர் என, நான்குமுனை சந்திப்பாக சத்தியமூர்த்தி நகர் சந்திப்பு உள்ளது.
மணலி விரைவு சாலையில் கனரக வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். அதே சமயம், கலைஞர் நகர், சத்தியமூர்த்தி நகரில் இருந்து, பைக், ஸ்கூட்டர், இலகுரக வாகனங்கள் சாலையை கடக்க நேரிடுகிறது.
மேலும், பாதசாரிகளும் சாலையை கடக்கும் முக்கிய சந்திப்பாக உள்ளது. இந்த நிலையில், அதிவேகமாக வரும் கனரக வாகனங்களில் சாலையை கடப்போர், விபத்தில் சிக்குவது தொடர்கதையாக உள்ளது.
எனவே, சத்தியமூர்த்தி நகர் நான்கு முனை சந்திப்பில், கனரக வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில், சிக்னல்கள் பொருத்த வேண்டும்.
-- கே.பிரகாஷ், 33, திருவொற்றியூர்.