/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சிக்கு ரூ.3.12 கோடி துறைமுகம் வழங்கியது
/
மாநகராட்சிக்கு ரூ.3.12 கோடி துறைமுகம் வழங்கியது
ADDED : பிப் 20, 2024 01:05 AM
சென்னை, சென்னை துறைமுக ஆணையம் 2022 - -23ம் நிதியாண்டில், 156.06 கோடி ரூபாய் உபரி வருவாய் ஈட்டியது.
இதில், 3.12 கோடி ரூபாய், சி.எஸ்.ஆர்., எனப்படும் சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கி உள்ளது.
அதன்படி, 66 லட்சம் ரூபாய், தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தை, வடசென்னையில் செயல்படுத்துவதற்காக, சென்னை மாநகராட்சிக்கு வழங்கி உள்ளது.
சென்னை மருத்துவக் கல்லுாரியில் உள்ள அரங்கத்தை சீரமைக்க 99.77 லட்சம் ரூபாயும், 100 பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களை வழங்குவதற்காக 31.50 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டு உள்ளது.
தவிர, சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் 50 ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்த 15.94 லட்சம் ரூபாய் உட்பட மொத்தம், 3.12 கோடி ரூபாய்க்கான காசோலைகளை, சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால், மாநகராட்சி வழங்கியுள்ளார்.

