/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விளையாட்டு திடல் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
/
விளையாட்டு திடல் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
ADDED : பிப் 20, 2024 12:47 AM
ஜாபர்கான்பேட்டை, ஜாபர்கான்பேட்டை விளையாட்டு திடல், 83 லட்சம் ரூபாய் மதிப்பில் சீர் செய்யப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
கோடம்பாக்கம் மண்டலம், 139வது வார்டு குமரன் நகர் ஆர்.ஆர்., காலனி, இரண்டாவது லிங்க் தெருவில், மாநகராட்சி விளையாட்டு திடல் அமைந்துள்ளது.
இந்த விளையாட்டு திடலில், கட்டட கழிவுகள் குவிக்கப்பட்டிருந்தன. மேலும், இந்த விளையாட்டு திடலில் சுற்றுச்சுவர் பல இடங்களில் உடைந்துள்ளன.
இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடப்பதாகவும், இப்பகுதிமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, விளையாட்டு திடலில் குவிக்கப்பட்ட மண் மற்றும் மரக்கழிவுகள் அகற்றப்பட்டன.
இதையடுத்து, அந்த விளையாட்டு திடலை சீரமைக்க, 83 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் கோரப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் கூடைப்பந்து, பேட்மின்டன் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. மேலும், திடலை சுற்றி நடைபாதை மற்றும் மின் விளக்குகளும் அமைக்கப்பட்டன.
இப்பணிகள் முடிவடைந்த நிலையில், இந்த விளையாட்டு திடலை மக்கள் பயன்பாட்டிற்காக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று திறந்து வைத்தார்.

