/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சபாக்களில் மயக்கும் மார்கழி இசை கச்சேரி :சுவாரசியமாக அமைந்த முதல் வாரம்
/
சபாக்களில் மயக்கும் மார்கழி இசை கச்சேரி :சுவாரசியமாக அமைந்த முதல் வாரம்
சபாக்களில் மயக்கும் மார்கழி இசை கச்சேரி :சுவாரசியமாக அமைந்த முதல் வாரம்
சபாக்களில் மயக்கும் மார்கழி இசை கச்சேரி :சுவாரசியமாக அமைந்த முதல் வாரம்
ADDED : டிச 21, 2025 05:10 AM

மார்கழி இசை விழாவின் ரசிகானுபவத்தை மேம்படுத்த எண்ணற்ற சபாக்களில் கச்சேரி களை கட்டியுள்ளது.
நா த இன்பத்தில் முனைவர் நந்திதா ரவி, ரூபக தாளத்தில் சாரங்கா ராக வர்ணத்தில், கச்சேரியை துவக்கினார்.
வழக்கமாக, கச்சேரிகளில் பழகிய கல்யாணி - வனஜாக் ஷி, பைரவி - விரிபோணி - ராக வர்ணங்கள் கேட்டாலும், பார்த்தசாரதி சுவாமி சபாவில், பிற்பகல் கச்சேரியில் விவேக் மூழிக்குலம் வழங்கிய வீணை குப்பய்யரின் பெஹாக் ராக வர்ணம், இன்னொரு அரிதான தேர்வு.
வர்ணம் தவிர்த்து, மாலா சந்திரசேகர் குழலிசையில் 'ஸ்ரீமன்நாராயண' என பௌளி ராகத்திலும், பந்துலரமா 'யோசனா கமலலோசனா' என்ற தர்பார் ராகக் கிருதியிலும் கச்சேரியை துவக்கினர்.
திருமெஞ்ஞானம் ராமநாதன் - உடன் பாண்டமங்கலம் யுவராஜ் - நாகஸ்வரத்தில் கௌளையில் தீட்சிதரின் 'ஸ்ரீமஹா கணபதி ரவதுமா' என, ஆதித்யநாராயணன் கௌளிபந்துவில் தியாகராஜரின் 'தரதியகராதா' என்றும் தங்கள் கச்சேரிகளைத் துவங்கி கொண்டனர்.
அ காடமியில், பிற்பகல் கச்சேரி செய்த ஆதித்யநாராயணன், விரைவில் முன்னணியில் ஒரு சுற்று வரப்போகிறார். தோடியும் காம்போதியும் அமர்க்களமாக ஆலாபனை செய்தார். தியாகராயரின் ரூபக தாளத்தில் அமைந்த 'எந்துகு தயராத' கிருதியையும், 'ஆனந்த நடனம் ஆடினார் ததிமி ததிமி என கனகசபையில்' என்ற பல்லவியையும், திஸ்ர திரிபுடை தாளம், நாலு களை சவுக்கத்திலும் இரு மொழிகளின் உச்சரிப்பு நேர்த்தியோடு செம்மையாகப் பாடினார்.
குரல் கார்வைகள், விறுவிறு நிரவல் கட்டமைப்பின் விதம், தனக்கு அடுத்து வயலினை அமர்த்திக்கொள்வது, கைகளை அபிநயித்து ஆட்டுவது என்று போய், குறித்த இடத்தில் சபாஷ் சொல்வது வரை கச்சிதம். இந்த கச்சேரியின் கஞ்சீரா இளைஞன் சுநாத் அரூருக்கு இரட்டை சபாஷ்.
'சே டஸ்ரீபாலகிருஷ்ண' கிருதிக்கு முன் வந்த பிரசன்னாவின் ஆலாபனையைவிட, அகாடமி காலைக் கச்சேரியில் ராமநாதன் நாகஸ்வரத்தில் வாசித்த துவிஜாவந்தி ஆலாபனை அபாரம்.
சத்தான சாறு பிழிந்து பருகக் கொடுத்து சவுக காலத்தில் 'அகிலாண்டேஸ்வரி ரக் ஷமாம்' என்று கிருதியை இரட்டை நாயனங்களும் இணைந்து துவங்குகையில் நொடிப்பொழுது மனதிலெழும் ஆன்மிகச் சிலிர்ப்பு ஒரு கொடை. அதன் தாக்கம் சிற்றுண்டி உணவகத்தில் 'இளநீர் இட்லி'யைச் சுவைக்கும் வரை நீடித்தது.
ம யிலாப்பூர், ராக சுதா அரங்கில் எம்.ஏ.சுந்தரேசன், எம்.ஏ.அனந்தகிருஷ்ணன் இணைந்து வழங்கிய 'பரூர் பாணி' இரட்டை வயலின் கச்சேரி. மோஹனமும், கரஹரப்பிரியாவும் விஸ்தாரமான ஆலாபனைகளாகக் கேட்கக் கிடைத்தது.
வயலினில் சுந்தரேசன் ஆகட்டும், மற்றொரு நாள் வேறொரு அரங்கில் குழலிசையில் சிக்கில் மாலா சந்திரசேகர் ஆகட்டும், முந்தைய தலைமுறையினருக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட கச்சேரி நேரத்திற்குள் எடுத்துக்கொண்டு, அனைத்து ராகங்களையும் கோடிகாட்டும் ஆலாபனைகளுக்கும் ஓரிரண்டில் கிருதி வரிகளில் விஸ்தாரமாக நிரவல் செய்வதற்கும் ஸ்வரகற்பனைக்கும் நிறைய அவகாசம் கிடைப்பது எப்படி? அதுதான் அவர்க ளின் துல்லியம்!

