/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாலத்தில் மணல் குவியல் வாகன ஓட்டிகள் அவதி
/
பாலத்தில் மணல் குவியல் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூலை 23, 2024 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலத்தில் மணல் குவியல் வாகன ஓட்டிகள் அவதி
மேடவாக்கத்தில் உள்ள இரண்டு மேம்பாலங்களிலும், இடது பக்கம் மணல் படுகை அடர்த்தியாய் உள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மணலில் சறுக்கி விழுந்து காயமடைகின்றனர்.
காற்று பலமாக வீசும்போது, மணல் துகள்கள் வாகன ஓட்டிகளின் கண்களை பதம்பார்க்கின்றன. மணல் படுகையில் சறுக்கி, விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
எனவே, மேம்பாலத்தை பராமரிக்கும் தமிழக நெடுஞ்சாலைத் துறையினர், வாரம் ஒருமுறை மேம்பாலத்தை சுத்தப்படுத்தி, விபத்தில்லா பகுதியாக மாற்ற வேண்டும்.
- பி.அர்ச்சனா, 38, கோவிலம்பாக்கம்.

