/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காய்ந்த பனை மரங்களால் விபத்து ஏற்படும் அபாயம்
/
காய்ந்த பனை மரங்களால் விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : மார் 11, 2024 01:39 AM
மடிப்பாக்கம்:பெருங்குடி மண்டலம், வார்டு 187, மடிப்பாக்கம், கார்த்திகேயன் நகர், ஏரிக்கரை ஓரம் 100க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. இவற்றில், 10க்கும் மேற்பட்ட பனை மரங்கள், வயது மூப்பால் காய்ந்துவிட்டன.
கிட்டத்தட்ட 120 அடி உயரம் உள்ள இந்த மரங்கள், எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழலாம். இதனால், ஏரிக்கரையோரம் நடைபயிற்சி செல்வோர், தெருவில் வாகனங்களில் பயணிப்போர், சாலையில் நடந்து செல்வோர், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
காய்ந்து, பட்டுப்போன இந்த பனை மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய கவனம் எடுத்து, விபத்து நிகழும் முன் இந்த பட்டுப்போன பனைமரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை வேண்டும் என, இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

