/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடியிருப்பு சாலைகள் புதுப்பிப்பு; 13 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம்
/
குடியிருப்பு சாலைகள் புதுப்பிப்பு; 13 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம்
குடியிருப்பு சாலைகள் புதுப்பிப்பு; 13 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம்
குடியிருப்பு சாலைகள் புதுப்பிப்பு; 13 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம்
ADDED : செப் 15, 2025 01:18 AM
சென்னை; சென்னை மாநகராட்சியில், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க., நகர், அம்பத்துார், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லுார் மண்டலங்களில் உள்ள, 20 வார்டுகளில், 70,000க்கும் மேற்பட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் உள்ளன.
இங்குள்ள சாலைகளை, வாரியம் பராமரித்து வந்தது. நிதி பற்றாக்குறை, பராமரிக்க போதிய ஊழியர்கள் இல்லாமை போன்ற காரணங்களால், பல ஆண்டுகளாக இங்குள்ள சாலைகள் புதுப்பிக்கப்படவில்லை.
இந்நிலையில், வாரிய குடியிருப்பு சாலைகளை மாநகராட்சி பராமரிக்கும் என, அரசு அறிவித்தது. இதையடுத்து, 20 வார்டுகளில் உள்ள, 15 கி.மீ., 104 சாலைகளை புதுப்பிக்க, 14 கோடி ரூபாயை மாநகராட்சி ஒதுக்கியது.
இந்த பணி, 21 பேக்கேஜ் வாரியாக பிரித்து, 13 ஒப்பந்ததாரர்களிடம் வழங்கப்பட்டு உள்ளது.
அதிக ஒப்பந்த நிறுவனங்களிடம் பணி வழங்கியதால், சாலை புதுப்பிக்கும் பணி விரைவில் முடியும் என, அதிகாரிகள் கூறினர்.