ADDED : நவ 02, 2024 12:39 AM
சென்னை,சிந்தாதிரிப்பேட்டை, வேதகிரி தெருவைச் சேர்ந்தவர் குமுதவல்லியின் கணவர் மோகன் தாஸ், 51; தனியார் மருத்துவமனை ஊழியர். கடந்த, 27ம் தேதி காலை தம்பதியனரிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின் வீட்டிலிருந்த குப்பையை, குப்பை தொட்டியில் கொட்டிவிட்டு வரச் சென்றவர், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
எங்கு தேடியும் கணவர் கிடைக்காததால், 30ம் தேதி சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில், குமுதவல்லி புகார் அளித்தார். அப்போது, '28ம் தேதி கூவம் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டவரின் உடல், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை சவகிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. அவற்றை பார்த்து உறுதி செய்யுங்கள்' என்று போலீசார் கூறியுள்ளனர்.
பின், சவகிடங்கிற்கு சென்று பார்த்தபோது, இறந்தது மோகன்தாஸ்தான் என்பது தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பின், அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

