/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போக்குவரத்துக்கு இடையூறான மரக்கிளைகள் அகற்றம்
/
போக்குவரத்துக்கு இடையூறான மரக்கிளைகள் அகற்றம்
ADDED : டிச 18, 2025 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரும்பாக்கம்: அரும்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்த, விபத்து அபாய மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.
அண்ணா நகர் மண்டலத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக மரங்கள் வளர்ந்துள்ளதாக புகார் எழுந்தது. அரும்பாக்கம் குடியிருப்பு பகுதிகளில், மரக்கிளைகள் வளர்ந்து, தெரு விளக்குகளை மறைத்து, விபத்து அபாயத்தில் இருந்தன.
இதையடுத்து நேற்று, அரும்பாக்கம் விவேகானந்தர் தெரு, மூவா தெரு, பாஞ்சாலி அம்மன் கோவில் தெரு, மேற்கு கல்லுாரி சாலை, ஜவகர் தெரு உள்ளிட்ட இடங்களில், விபத்து அபாய மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.

