/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
த.வெ.க., அலுவலகத்தில் போராட்டம்
/
த.வெ.க., அலுவலகத்தில் போராட்டம்
ADDED : டிச 15, 2025 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனையூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலரை மாற்ற வேண்டும் என, த.வெ.க.,வினர் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.
ஆவடி, திருவேற்காடு, பட்டாபிராம், திருநின்றவூர் பகுதிகளைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட த.வெ.க., தொண்டர்கள், இ.சி.ஆர்., பனையூரில் உள்ள த.வெ.க., தலைமை அலுவலகத்தில் நேற்று கூடினர்.
திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலர் மணிகண்டன், கட்சி பணிகளை முறையாக ஒருங்கிணைப்பதில்லை, பணம் வாங்கி பதவி வழங்குகிறார்.
அதனால், அவரை மாற்ற வேண்டும் என, த.வெ.க.,வினர் கோஷம் எழுப்பினர். அதற்கான மனுவை, அங்கிருந்த ஊழியர்களிடம் வழங்கி கலைந்து சென்றனர்.

