ADDED : பிப் 09, 2024 12:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு, சென்னை, புளியந்தோப்பு, 73வது வார்டுக்கு உட்பட்ட நாராயணசாமி தெருவில், கழிவுநீர் பிரச்னை பல மாதங்களாக நீடிக்கிறது.
இதுகுறித்து, பகுதி மக்கள் வார்டு கவுன்சிலர் அம்பேத்வளவனிடம் பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில், 6வது மண்டல அலுவலர் முருகன், தலைவர் சரிதா மகேஷ்குமார் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் பலர், கழிவுநீர் பிரச்னை உள்ள குறிப்பிட்ட இடத்திற்கு நேற்று சென்று, ஆய்வு செய்தனர். பின், மாநகராட்சி மண்டல அலுவலகத்திலும், இதுகுறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
முடிவில், கழிவுநீர் பிரச்னையில் நிரந்தர தீர்வு ஏற்படுத்தவும், ஒரு வார காலத்தில் பிரகாஷ்ராவ் காலனி, நாச்சாரம்மா லேன், பாடிசன்புரம் உள்ளிட்ட பகுதி பிரச்னைகளை தீர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

