/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மரம் சாய்ந்து மின்சாரம் துண்டிப்பு
/
மரம் சாய்ந்து மின்சாரம் துண்டிப்பு
ADDED : ஏப் 20, 2025 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்,மேற்கு தாம்பரம், கென்னடி தெருவில், மாநகராட்சி சார்பில் மழைநீர் கால்வாய் துார்வாரும் பணி நடந்து வருகிறது. கால்வாயை சுத்தப்படுத்த மண்ணை அகற்றிய போது, அருகேயிருந்த மரம் ஒன்று, திடீரென சாய்ந்து விழுந்தது.
அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமானது. மேலும், மரம் விழுந்ததில் மின்வடம் அறுந்து, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து, அறுந்த வடத்தை சீரமைத்து, மின் இணைப்பு வழங்கினர்.

