/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் திறப்பு ஒத்திவைப்பு
/
ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் திறப்பு ஒத்திவைப்பு
ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் திறப்பு ஒத்திவைப்பு
ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் திறப்பு ஒத்திவைப்பு
ADDED : செப் 23, 2025 01:06 AM
அமைந்தகரை:துணை முதல்வர் உதயநிதிக்கு நேரமில்லாததால், இன்று பயன்பாட்டிற்கு திறக்க இருந்த ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது.
அண்ணா நகர் மண்டலம், 102வது வார்டு, அமைந்தகரை கஜலட்சுமி காலனியில், மாநகராட்சி காலி மனை இருந்தது. அதில், வாலிபால் உட்பட ஐந்து விளையாட்டுகள் அடங்கிய ஒருங்கிணைந்த மைதானம் அமைக்கப் பட்டது.
சி.எம்.டி.ஏ., எனும் பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், 2,652 சதுர பரப்பளவில், 10.56 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது.
இதை, முதல்வர் ஸ்டாலின், இன்று நேரடியாக பங்கேற்று பயன்பாட்டிற்கு திறந்து வைப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.
திறப்பு விழாவுக்கான கல்வெட்டு உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடந்த நிலையில், விழா திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இதனால், அப் பகுதியில் உள்ள இளைஞர்கள் ஏமாற்றமடைந்தனர்.
விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, இந் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேறு நிகழ்ச்சிக்கு அவர் செல்வதால், மைதானம் திறப்பு ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.