/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குழாய் இணைப்பு பணி 2 நாள் குடிநீர் 'கட்'
/
குழாய் இணைப்பு பணி 2 நாள் குடிநீர் 'கட்'
ADDED : மார் 14, 2024 12:30 AM
சென்னை,நெம்மேலியில் தினமும், 15 கோடி லிட்டர் உற்பத்தி திறனில் கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் நிலையம் உள்ளது.
இங்கு, பிரதான குழாயுடன் உந்து குழாய்கள் இணைக்கும் பணி நடக்க உள்ளது.
இதனால், வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில், அடையாறு மண்டலத்தில் வேளச்சேரி, பள்ளிப்பட்டு, பெருங்குடி மண்டலத்தில் பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், உள்ளகரம்-, புழுதிவாக்கம், ஆலந்துார் பகுதியில் குடிநீர் வழங்குவது நிறுத்தப்படும்.
மேலும், தாம்பரம் மாநகராட்சியில், பல்லாவரம், பம்மல், அனகாப்புதுார், ராதாநகர் ஆகிய பகுதிகளிலும் நிறுத்தப்படும்.
பொதுமக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீரை சேமித்து வைக்க வேண்டும்.
அவசர தேவைக்கு, https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்தால், லாரி குடிநீர் பெற்றுக்கொள்ளலாம்.

