/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெட்ரோல் குண்டு வீச்சு 'கஞ்சா' ஆசாமிகள் அட்டூழியம்
/
பெட்ரோல் குண்டு வீச்சு 'கஞ்சா' ஆசாமிகள் அட்டூழியம்
பெட்ரோல் குண்டு வீச்சு 'கஞ்சா' ஆசாமிகள் அட்டூழியம்
பெட்ரோல் குண்டு வீச்சு 'கஞ்சா' ஆசாமிகள் அட்டூழியம்
ADDED : டிச 19, 2025 05:21 AM

நொளம்பூர்: போரூரைச் சேர்ந்தவர் பிரபாகரன், 37. இவர், முகப்பேர் கிழக்கு, வேணுகோபால் தெருவில் உள்ள தன் மாமியார் ஜமீலா, 57 என்பவரது வீட்டிற்கு, நேற்று முன்தினம் இரவு சென்றார். அப்போது, வீட்டின் அருகே கஞ்சா புகைத்து கொண்டிருந்த வாலிபர்களை அங்கிருந்து துரத்தியுள்ளார்.
ஆத்திரமடைந்த வாலிபர்கள், நள்ளிரவில் பிரபாகரனின் மாமியார் வீட்டில் நாட்டு வெடிகுண்டை வீசி தப்பினர். அந்த நாட்டு வெடிகுண்டு வெடிக்கவில்லை.
தகவலறிந்த நொளம்பூர் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். இந்த நிலையில், மீண்டும் அங்கு வந்த கஞ்சா போதை வாலிபர்கள், போலீசார் இருப்பதை அறிந்து, வீட்டின் பின்பக்கமாக சென்று பெட்ரோல் குண்டு வீசி தப்பினர். இதனால், வீட்டின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளன.
சம்பவத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த மார்ட்டின், 22 மற்றும் மூன்று சிறுவர்கள் நொளம்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

