/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மதுரவாயலில் வரும் 14ல் செல்ல பிராணிகள் விழா
/
மதுரவாயலில் வரும் 14ல் செல்ல பிராணிகள் விழா
ADDED : செப் 12, 2025 03:40 AM
சென்னை, மதுரவாயல், எஸ்.பி.பி., கார்டன்ஸ் வளாகத்தில் வரும் 14ம் தேதி, மாலை 3:30 முதல் இரவு 8:00 மணி வரை செல்லப் பிராணிகள் திருவிழா நடக்கவுள்ளது.
செல்லப்பிராணி வளர்ப்பு, அவற்றுக்கான உணவு, பயிற்சி, தெரு நாய்கள் குறித்து விழிப்புணர்வு உள்ளிட்ட தலைப்புகளில் நிபுணர்கள் உரையாற்ற உள்ளனர்.
'செல்லப்பிராணிகளைக் கொண்டாடுங்கள்! அன்பைக் கொண்டாடுங்கள்!' என்ற முழக்கத்துடன், நடிகையும், விலங்குகள் நல செயற்பாட்டாளருமான சந்தியா ஜகர்லமுடி பேசுகிறார்.
நாய்க்குட்டி தத்தெடுப்பு இயக்கம், ராம்ப் வாக், டி.ஜே., இரவு, செல்லப்பிராணிகளுக்கு தேவையான பொருட்களுக்கான அரங்குகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும்.
இதில் 1,000க்கும் அதிகமான செல்லப் பிராணி ஆர்வலர்கள் பங்கேற்கலாம். பள்ளி மாணவர்களுக்கு இலவசம்; மற்றவர்களுக்கு நுழைவு கட்டணம் 500 ரூபாய். இந்நிகழ்ச்சியை, பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், 'ஸ்டர்லேண்ட் பெட்ஸ்' அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.