/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லாரியை முந்தியதால் விபத்து கொரட்டூர் நபர் உயிரிழப்பு
/
லாரியை முந்தியதால் விபத்து கொரட்டூர் நபர் உயிரிழப்பு
லாரியை முந்தியதால் விபத்து கொரட்டூர் நபர் உயிரிழப்பு
லாரியை முந்தியதால் விபத்து கொரட்டூர் நபர் உயிரிழப்பு
ADDED : பிப் 26, 2024 01:21 AM
அயப்பாக்கம்:கொரட்டூரைச் சேர்ந்தவர் ஸ்ரீவத்சன், 55. அதே பகுதியில், ஹோமியோபதி 'ஹெல்த் கன்சல்டிங்' என்ற பெயரில் 'கிளினிக்' நடத்தி வந்தார். அயப்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு, குடும்பத்துடன் சென்றார்.
பின், ஸ்கூட்டரில் அயப்பாக்கம் டன்லப் வழியாக, அம்பத்துார் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, அம்பத்துார் நோக்கி சென்ற 'ஈச்சர்' லாரியை, ஸ்ரீவத்சன் முந்தி செல்ல முயன்றுள்ளார்.
இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த ஸ்ரீவத்சன் தலை மீது, லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. சம்பவ இடத்திலேயே ஸ்ரீவத்சன் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆவடி போக்குவரத்து போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து, அம்பத்துார், அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனரான ஞானவேல், 32, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

