/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை பல்கலை இடத்தில் 'தோழி' விடுதி கட்ட எதிர்ப்பு
/
சென்னை பல்கலை இடத்தில் 'தோழி' விடுதி கட்ட எதிர்ப்பு
சென்னை பல்கலை இடத்தில் 'தோழி' விடுதி கட்ட எதிர்ப்பு
சென்னை பல்கலை இடத்தில் 'தோழி' விடுதி கட்ட எதிர்ப்பு
ADDED : ஏப் 08, 2025 02:20 AM
சென்னை, சென்னை பல்கலைக்கு சொந்தமான இடத்தில், பணிபுரியும் பெண்கள் விடுதி கட்ட, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னைப் பல்கலை ராமானுஜம் கணித ஆராய்ச்சி நிறுவனத்தின் பின்புறத்தில் மாணவியர் விடுதி உள்ளது. அங்கு, பணிபுரியும் பெண்களுக்கான 'தோழி' விடுதி கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து, லட்சக்கணக்கான பெண்கள் வந்து சென்னையில் தங்கி பணிபுரிகின்றனர்.
அவர்களுக்கான 'தோழி' விடுதிகள் அதிகமாக கட்ட வேண்டும் என்பதில், பா.ம.க.,வுக்கு மாற்றுக்கருத்து இல்லை.
சேப்பாக்கம் வளாகத்தில் உள்ள மாணவியர் விடுதி, மோசமான நிலையில் உள்ளது. எனவே, புதிய விடுதி கட்ட வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி, புதிய மாணவியர் விடுதி கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியாகும் என, அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், சமூக நலத்துறையின் சார்பில், 'தோழி' விடுதி கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்திருப்பது, மாணவியருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
'தோழி' விடுதி கட்ட, சென்னையில் ஏராளமான இடங்கள் இருக்கும் நிலையில், அவற்றை விடுத்து, பல்கலை மாணவியர் தங்குமிடத்தை பறிப்பது நியாயமல்ல. எனவே, இந்த இடத்தில் மாணவியர் விடுதி கட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

