/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இருளில் மூழ்கும் ஓ.எம்.ஆர்., விபத்து அபாயத்தில் பயணம்
/
இருளில் மூழ்கும் ஓ.எம்.ஆர்., விபத்து அபாயத்தில் பயணம்
இருளில் மூழ்கும் ஓ.எம்.ஆர்., விபத்து அபாயத்தில் பயணம்
இருளில் மூழ்கும் ஓ.எம்.ஆர்., விபத்து அபாயத்தில் பயணம்
ADDED : பிப் 08, 2024 12:11 AM
சென்னை, ஓ.எம்.ஆரில், எஸ்.ஆர்.பி., டூல்ஸ் முதல் சிறுசேரி வரை, 20 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் பணி நடக்கிறது. இதில், எஸ்.ஆர்.பி., டூல்ஸ் முதல் செம்மஞ்சேரி வரை, சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்டது.
சாலை மைய பகுதியில், 30 அடி இடைவெளியில், இரு பகுதியிலும் வெளிச்சம் தெரியும் வகையில், தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன.
மெட்ரோ பாதைக்காக தெருவிளக்கு கம்பங்களை அகற்றியதால், மெட்ரோ நிர்வாகமே தற்காலிக விளக்கு அமைத்து, சாலை இருளை போக்க வேண்டும். ஆனால், சில இடங்களில் விளக்கு அமைக்கவில்லை.
குறிப்பாக, செம்மஞ்சேரி பகுதியில், 2 கி.மீ., துாரம் விளக்கு அமைக்காததால், சாலை இருளில் மூழ்கி உள்ளது.
இதனால், மெட்ரோ பணிக்காக அமைக்கப்பட்ட தடுப்பு இருப்பது தெரியாமல், அடிக்கடி விபத்து நடக்கிறது. மேலும், சாலையோரம் இருட்டாக இருப்பதால், வழிப்பறி சம்பவங்களும் நடக்கின்றன. சட்டவிரோத செயலுக்கும், இருட்டை பயன்படுத்துகின்றனர். இருட்டால், அணுகு சாலையில் செல்லும் பாதசாரிகளும் அச்சமடைகின்றனர்.
தெருவிளக்குகள் அகற்றப்பட்ட இடங்களில், வெளிச்சம் ஏற்படுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

