/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குளத்தில் கழிவுநீர் கலப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
குளத்தில் கழிவுநீர் கலப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்
குளத்தில் கழிவுநீர் கலப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்
குளத்தில் கழிவுநீர் கலப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : செப் 27, 2024 12:31 AM

துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு, துரைப்பாக்கம், பஞ்சன்குட்டை குளம் ஒரு ஏக்கர் பரப்பு உடையது. குளத்தைச் சுற்றி வேலி அமைக்காததால், பெரும் பகுதி ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது.
தவிர, சுற்று வட்டார பகுதியின் நிலத்தடிநீர் ஆதாரமாக விளக்கும் இந்த குளத்தில் சிலர், கழிவுநீர் விடுகின்றனர். இதனால், நிலத்தடிநீர் பாதிப்பதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதி மக்கள் கூறினர்.
வீடுகளில் இருந்து விடப்படும் கழிவுநீர் இணைப்பை துண்டிக்க, மாநகராட்சி, குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கூறினர்.