/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பறிமுதல் ரேஷன் அரிசி விபரம் வெளியிட அதிகாரிகள் தயக்கம்?
/
பறிமுதல் ரேஷன் அரிசி விபரம் வெளியிட அதிகாரிகள் தயக்கம்?
பறிமுதல் ரேஷன் அரிசி விபரம் வெளியிட அதிகாரிகள் தயக்கம்?
பறிமுதல் ரேஷன் அரிசி விபரம் வெளியிட அதிகாரிகள் தயக்கம்?
ADDED : மார் 19, 2024 12:30 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர், எண்ணுார், மணலி சுற்றுவட்டாரத்தில், நியாயவிலை கடைகளில் விற்பனையாகும் ரேஷன் அரிசியை, சிலர், கிலோ 3 முதல் 5 ரூபாய் வரை, விலை கொடுத்து வாங்கி சென்று, ஆந்திராவில் அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக கிடைக்கும் தகவலின்படி, உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், அவ்வப்போது, கடத்தப்படும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதேபோல, நேற்று மதியம், எண்ணுார் ரயில் நிலையம் அருகே மூட்டை மூட்டையாக அரிசி இருப்பது குறித்து அறிந்த, உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், அவற்றை பறிமுதல் செய்து, அலுவலகம் எடுத்து வந்தனர்.
பறிமுதல் செய்து எடுத்து வரப்பட்ட அரிசியின் எடை, 2 டன் இருக்கும் என தெரிவித்த அதிகாரிகள், மற்ற தகவல்கள் குறித்து விபரங்கள் தர மறுத்து விட்டனர்.
விசாரித்த போது, 'உயர் அதிகாரிகள் அரிசி பறிமுதல் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகக் கூடாது' என, வாய்மொழி உத்தரவிட்டதாககூறப்படுகிறது.

