/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வார்டு சபையில் கூறும் பிரச்னைகளில் ஒன்றை கூட தீர்க்கவில்லை: கவுன்சிலர்கள் காட்டம்
/
வார்டு சபையில் கூறும் பிரச்னைகளில் ஒன்றை கூட தீர்க்கவில்லை: கவுன்சிலர்கள் காட்டம்
வார்டு சபையில் கூறும் பிரச்னைகளில் ஒன்றை கூட தீர்க்கவில்லை: கவுன்சிலர்கள் காட்டம்
வார்டு சபையில் கூறும் பிரச்னைகளில் ஒன்றை கூட தீர்க்கவில்லை: கவுன்சிலர்கள் காட்டம்
ADDED : டிச 22, 2025 04:09 AM
வளசரவாக்கம்: வளசரவாக்கம் மண்டல குழு கூட்டம், தலைவர் ராஜன் தலைமையில் மண்டல அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில், வார்டு பிரச்னைகள் மற்றும் நிறைவேற்றப்பட்ட 23 தீர்மானங்கள் குறித்து கவுன்சிலர்கள் பேசியதாவது:
சத்யநாதன், அ.தி.மு.க., 145வது வார்டு: நெற்குன்றத்தில், ஊர்மக்கள் சார்பில் 25 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை சிதிலமடைந்தது. அதே இடத்தில், 2023ல் வெண்கல சிலை அமைக்க அனுமதி கேட்டோம்; கிடைக்கவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம், 'நமக்கு நாமே' திட்டத்தில் அரசு பெயரில் அந்த சிலை அமைக்க, முதன்மை செயலர், மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் அனுப்பினோம். மூன்று மாதங்களுக்கு முன் நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் அனுமதி வழங்கப்படவில்லை. நாங்கள் ஒதுக்கப்பட்டவர்களா; இதில் உள்நோக்கம் உள்ளதா?
கிரிதரன், அ.ம.மு.க., 148வது வார்டு: வயதிற்கு வரும் பெண் குழந்தைகளுக்கு 'இளம் பருவ சுகாதார சேவை' மற்றும் முதியோர் நல மருத்துவம் ஆகியவை நெற்குன்றத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் இயக்கப்படவில்லை. அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
நெற்குன்றம், ராஜிவ் காந்தி நகரில் சிமென்ட் சாலை அமைக்க, சாலை பெயர்த்தெடுக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்தும் புது சாலை அமைக்கப்படவில்லை.
ரமணி மாதவன், தி.மு.க., 147வது வார்டு: கிருஷ்ணா நகர், அஷ்டலட்சுமி நகர், பல்லவன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைக்க வேண்டும். பூங்காவில் பராமரிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
வார்டில் பல இடங்களில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி வருகிறது.
பாரதி, தி.மு.க., 152வது வார்டு: ஒரு வார்டில் உள்ள பணியாளர்களை அதே வார்டில் எஸ்.ஐ.ஆர்., பணிகளை மேற்கொள்ள நியமிக்க வேண்டும். பிற வார்டுகளில் போடுவதால், வார்டில் உள்ள பணிகள் பாதிக்கப்படுகிறது.
செல்வகுமார், தி.மு.க., 154வது வார்டு: வார்டில் 4 இடங்களில் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. அவற்றை இடித்து அகற்ற கடந்த சில கூட்டங்களாக பேசி வருகிறேன். இன்னும் நடவடிக்கை இல்லை.
ஏரியா சபா கூட்டம் ஏன் நடத்துகிறீர்கள் என, தெரியவில்லை. அந்த கூட்டத்தில் மக்கள் கூறும் பிரச்னைகளுக்கு, ஒரு தீர்மானம் கூட, மண்டல கூட்டத்திற்கு வரவில்லை.

