/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அட்டவணை புதுசு; அறிவிப்பு பழசு ரயில் பயணியர் ஏமாற்றம்
/
அட்டவணை புதுசு; அறிவிப்பு பழசு ரயில் பயணியர் ஏமாற்றம்
அட்டவணை புதுசு; அறிவிப்பு பழசு ரயில் பயணியர் ஏமாற்றம்
அட்டவணை புதுசு; அறிவிப்பு பழசு ரயில் பயணியர் ஏமாற்றம்
ADDED : ஜன 03, 2026 05:21 AM

சென்னை: மின்சார ரயில்களுக்கான புதிய கால அட்டவணையில், ஜன., 1ல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், புதிய ரயில்கள் அறிவிப்பு, நிறுத்தப்பட்ட ரயில்களின் சேவை மீண்டும் துவக்கம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது, பயணியர் மத்தியில் ஏமற்றத்தை அளித்துள்ளது.
தெற்கு ரயில்வே சென்னை ரயில் கோட்டம் சார்பில், சென்னை - தாம்பரம் - செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களில் தினமும், 600க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்களின் சேவைகள் இயக்கப்படுகின்றன.
ஆண்டுதோறும், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள்., பயணியர் நல சங்கங்கள் அளிக்கும் மனுக்களை ஆய்வு செய்து, புதிய ரயில்கள் இயக்கம், மின்சார ரயில் சேவை நீட்டிப்பு உள்ளிட்ட புதிய அறிவிப்புகள் இடம் பெறும்.
இதற்கிடையே, புறநகர் மின்சார ரயில்களுக்கான புதிய கால அட்டவணை, சென்னை ரயில் கோட்டம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த கால அட்டவணை ஜன., 1ல் அமலுக்கு வந்துள்ளது.
ஆனால், புதிய கால அட்டவணையில் புதிய அறிவிப்புகள் ஏதும் இல்லாததால், புறநகர் மின்சார ரயில் பயணியர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
---------இதுகுறித்து, ரயில் பயணியர் சங்க நிர்வாகிகள் பாஸ்கர், முருகையன் ஆகியோர் கூறியதாவது:
சென்னை புறநகரில் பயணி யரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால், போதிய அளவில் மின்சார ரயில்களின் சேவை இல்லை.
புறநகர் ரயில்களுக்கான புதிய கால அட்டவணையிலும், புதிய ரயில்களின் சேவைகள் குறித்து அறிவிப்பு ஏதும் இல்லாதது, பயணியரிடம் ஏமாற்றத்தை அறித்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

