/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாயமான பெண் சடலமாக மீட்பு: கொலை செய்த நண்பர் கைது
/
மாயமான பெண் சடலமாக மீட்பு: கொலை செய்த நண்பர் கைது
மாயமான பெண் சடலமாக மீட்பு: கொலை செய்த நண்பர் கைது
மாயமான பெண் சடலமாக மீட்பு: கொலை செய்த நண்பர் கைது
ADDED : டிச 22, 2025 05:08 AM

சிங்கபெருமாள் கோவில்: செங்கல்பட்டு, மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கோட்டி, 50. கணவர் இறந்த நிலையில், இரு மகன்களுடன் வசித்து வந்தார். கடந்த 10ம் தேதி மாயமானார்.
போலீசாரின் விசாரணையில், கடைசியாக, எழும்பூரைச் சேர்ந்த மதுரவேல் என்ற ஜான், 44, என்பவரிடம் பேசிய தெரிய வந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், கோட்டியை அவர் அடித்து கொன்றது தெரிய வந்தது.
விசாரணையில் தெரிய வந்ததாவது:
கோட்டிக்கும் மதுரவேலுக்கும், ஒரு மாதமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. புதுப்பட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு, கடந்த 10ம் தேதி இருவரும், 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் சென்றுள்ளனர். அப்போது, மதுரவேலிடம் கொடுத்த 30,000 ரூபாயை கோட்டி திரும்ப கேட்டதால், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், திருப்போரூர் அடுத்த ஆலத்துார் பகுதியில் காலி மனைக்கு ஸ்கூட்டரை திருப்பிய மதுரவேல், அங்கு கோட்டியை அடித்து கொன்று தப்பிச் சென்றுள்ளார்.
இவ்வாறு, விசாரணையில் தெரிந்தது.
இதையடுத்து, நேற்று மதியம் ஆலத்துார் பகுதியில் கோட்டியின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, மதுரவேலை கைது செய்து விசாரிக்கின்றனர்.

