/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொளத்துாரில் ரூ.23.50 கோடியில் சந்தை பணி: எதிரான வழக்கு ரத்து
/
கொளத்துாரில் ரூ.23.50 கோடியில் சந்தை பணி: எதிரான வழக்கு ரத்து
கொளத்துாரில் ரூ.23.50 கோடியில் சந்தை பணி: எதிரான வழக்கு ரத்து
கொளத்துாரில் ரூ.23.50 கோடியில் சந்தை பணி: எதிரான வழக்கு ரத்து
ADDED : பிப் 07, 2025 12:27 AM
சென்னை, கொளத்துாரில் கட்டப்படும் சந்தை வளாகத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என, சி.எம்.டி.ஏ., தெரிவித்துள்ளது.
சி.எம்.டி.ஏ., வெளியிட்ட அறிக்கை:
சென்னை கொளத்துார் பேப்பர் மில் சாலையில், 10 கோடி ரூபாய் மதிப்பில், நவீன சந்தை வளாகம் கட்ட 0.75 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. சாத்தியக்கூறு ஆராயப்பட்டு, வரைபடங்கள் தயாரிக்கப்பட்ட நிலையில், இதன் திட்ட மதிப்பு 23.50 கோடி ரூபாயாக அதிகரித்தது.
இத்திட்டத்துக்கு, 2024 மார்ச் 7ல் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை மாவட்ட நிர்வாகத்திடம் நுழைவு அனுமதி பெற்று, கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன. நவீன சந்தை வளாகத்துக்கு, சி.எம்.டி.ஏ., 2024 ஆக., 7ல் திட்ட இசைவு வழங்கியது.
நில உரிமை தொடர்பான ஒரு வழக்கில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, நவீன சந்தைக்கான கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

