/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாஞ்சா நுால், 'ட்ரோன்கள்' பறக்க விட தடை நீடிப்பு
/
மாஞ்சா நுால், 'ட்ரோன்கள்' பறக்க விட தடை நீடிப்பு
ADDED : அக் 28, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னையில் மேலும் 60 நாட்களுக்கு, ட்ரோன்கள் பறக்க விடவும், மாஞ்சா நுால் விற்பனை மற்றும் அந்நுாலில் காற்றாடி விடுவதற்கான தடையை நீட்டித்து, கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
கண்ணாடியிழை போல காற்றில் பறந்து கழுத்தை அறிக்கும், மாஞ்சா நுாலில் காற்றாடி விடுவதற்கும், அந்நுாலை பறக்க விடுதல், விற்பனை செய்தல், போன்றவற்றுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆளில்லா விமானம் எனும் 'ட்ரோன்கள்' பறக்க விடுவதற்கும் தடை உள்ளது.
'ட்ரோன்' மற்றும் மாஞ்சா நுாலுக்கான தடையை, டிச., 27ம் தேதி வரை, மேலும் 60 நாட்களுக்கு நீட்டித்து, போலீஸ் கமிஷனர் அருண் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

