/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆபாச வீடியோ எடுத்து பெண்ணை மிரட்டியவர் கைது
/
ஆபாச வீடியோ எடுத்து பெண்ணை மிரட்டியவர் கைது
ADDED : மார் 08, 2024 12:23 PM
அண்ணா நகர், சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த 35 வயது பெண், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், என் கணவர் இறந்து விட்டதால், உறவினர்களுடன் வசித்து, அண்ணா நகரிலுள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.
இதே நிறுவனத்தில் முன்பு பணிபுரிந்த, முகப்பேரைச் சேர்ந்த சத்யஜித், 35, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அவர், என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, நெருங்கி பழகினார்.
சில மாதங்களுக்கு முன், கோயம்பேடில் உள்ள விடுதிக்கு அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்தார்.
அதை வீடியோவாக எடுத்து, தொடர்ந்து என்னை மிரட்டுகிறார் எனக் குறிப்பிட்டிருந்தார்.
அண்ணா நகர் மகளிர் போலீசார் விசாரித்ததில், சத்யஜித் வீடியோ எடுத்து வைத்து மிரட்டியது உறுதியானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று காலை அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

