/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரியாணி கடை ஊழியரை தாக்கி பணம் பறித்தவர் கைது
/
பிரியாணி கடை ஊழியரை தாக்கி பணம் பறித்தவர் கைது
ADDED : டிச 30, 2025 04:30 AM
சென்னை: பெரியமேடு பகுதியில் பிரியாணிக்கடை ஊழியரை கத்தியால் தாக்கி பணம் பறித்துச் சென்றவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
சிந்தாதிரிப்பேட்டை, படவேட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜான்பீட்டர், 46. கடந்த மூன்று ஆண்டுகளாக, பெரியமேடு அல்லிகுளம் அருகே உள்ள பிரியாணி கடையில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம், கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்மநபர், கத்தியால் தாக்கி, 1,300 ரூபாயை பறித்து, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பெரியமேடு போலீசார், பணப் பறிப்பில் ஈடுபட்ட பூங்கா நகரைச் சேர்ந்த விஜயநாராயணன், 35, என்பவரை, நேற்று கைது செய்து, கத்தி மற்றும் 400 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

