/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாடகை கட்டடத்தில் இயங்கும் மாதவரம் நீதிமன்றம்; அடிப்படை வசதியின்றி வக்கீல், புகார்தாரர்கள் அவதி
/
வாடகை கட்டடத்தில் இயங்கும் மாதவரம் நீதிமன்றம்; அடிப்படை வசதியின்றி வக்கீல், புகார்தாரர்கள் அவதி
வாடகை கட்டடத்தில் இயங்கும் மாதவரம் நீதிமன்றம்; அடிப்படை வசதியின்றி வக்கீல், புகார்தாரர்கள் அவதி
வாடகை கட்டடத்தில் இயங்கும் மாதவரம் நீதிமன்றம்; அடிப்படை வசதியின்றி வக்கீல், புகார்தாரர்கள் அவதி
ADDED : டிச 29, 2025 07:05 AM

மாதவரம்: மாதவரத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம், வாடகை கட்டடத்தில் போதுமான அடிப்படை வசதிகளின்றி இயங்குவதால் பலரும் அவதிக்குள்ளாகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கீழ் உள்ள மாதவரம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், 2019ம் ஆண்டு முதல் மாதவரம் - செங்குன்றம் சாலையில், வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இங்கு, குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
மாதவரம், புழல், மாதவரம் பால்பண்ணை போக்குவரத்து புலனாய்வு பிரிவுகள், மகளிர் காவல் நிலையங்கள் உள்ளிட்ட, ஏழு காவல் நிலையங்களுக்குட்பட்ட விபத்து உள்ளிட்ட வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.
தற்போது 3,000க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணையில் உள்ளன. தினமும், குறைந்தபட்சம் 75க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.
தினம் நுாற்றுக்கணக்கான புகார்தாரர்கள், போலீசார், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் வரும் நிலையில், நீதிமன்றத்தில் போதிய வசதிகள் இல்லை.
இருக்கும் கழிப்பறையும், புகார்தாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இல்லை. வாகன நிறுத்தும் வசதி இல்லை. பார்வையாளர் அமர இருக்கை வசதி இல்லை.
இதுபோன்ற பிரச்னைகளை சுட்டிக்காட்டி, நீதிமன்றத்திற்கு சொந்த கட்டடம் வேண்டும் என, வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, மாதவரம் சி.எம்.டி.ஏ., வளாகம், சிம்சன் ரெப்கோ ஜி.என்.டி., சாலை மற்றும் 'டால்கோ' அமைந்துள்ள மூலக்கடை என மூன்று இடங்களில், பொதுப்பணித் துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, இடம் தேர்வு செய்யும் பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால், நீதிமன்றத்திற்கு வருவோர், போதிய வசதி கிடைக்காமல் தவிக்கும் நிலை தொடர்ந்து வருகிறது.
ஒரு நீதிபதியே இருப்பதால்
வழக்குகள் தேக்கம்
மாதவரம் நீதிமன்றத்தில், சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை விசாரிக்க, இரு நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால் ஒரே ஒரு நீதிபதி மட்டுமே, அனைத்து வழக்குகளையும் விசாரித்து வருகிறார். இதனால், வழக்குகளை தாமதமின்றி விரைந்து முடிப்பதிலும் சிக்கல் நிலவுகிறது.
மேலும், புழல் சிறையில் கைதிகள் இறந்தால், இந்த நீதிபதியே நேரில் சென்று உடற்கூராய்வு விசாரணை நடத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால், அன்று விசாரிக்க வேண்டிய மற்ற வழக்குகள் கிடப்பில் போடும் நிலையும் உள்ளது.

