/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.37 லட்சம் செலவில் இணைப்பு தார்ச்சாலை
/
ரூ.37 லட்சம் செலவில் இணைப்பு தார்ச்சாலை
ADDED : பிப் 08, 2024 12:10 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர் மண்டலம் 4வது வார்டு, சண்முகபுரத்தில் இருந்து, விம்கோ நகர் ரயில் நிலையம் செல்ல சாலை உள்ளது. ஆனால், ஜல்லிக்கற்களாக இருப்பதால் நடக்க முடியாமல் இருந்தது.
இந்நிலையில், மாநகராட்சி நிதியான, 37 லட்சம் ரூபாய் செலவில், 1,200 அடி துாரத்திற்கு தார்ச்சாலை அமைக்கும் பணி, நேற்று துவங்கியது.
இதற்கான பூமி பூஜையில், 4வது வார்டு, மார்க்.கம்யூ., கட்சி கவுன்சிலர் ஜெயராமன் பங்கேற்று, பணிகளை துவக்கி வைத்தார். இந்த தார்ச்சாலை பணிகள் முடியும் பட்சத்தில், திருவொற்றியூர் மேற்கு பகுதியில், சண்முகபுரம், அம்பேத்கர் நகர், சரஸ்வதி நகர் உட்பட 30க்கும் மேற்பட்ட நகர் மக்கள், ரயில் சேவையை பெற பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி உதவி பொறியாளர் அன்னலட்சுமி, மாதர் சங்க மாவட்ட செயலர் பாக்கியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

