/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தென்மண்டல கைப்பந்து போட்டி கவிபாரதி பள்ளி அணி அசத்தல்
/
தென்மண்டல கைப்பந்து போட்டி கவிபாரதி பள்ளி அணி அசத்தல்
தென்மண்டல கைப்பந்து போட்டி கவிபாரதி பள்ளி அணி அசத்தல்
தென்மண்டல கைப்பந்து போட்டி கவிபாரதி பள்ளி அணி அசத்தல்
ADDED : செப் 12, 2025 02:33 AM

திருவொற்றியூர், தென்மண்டல கைப்பந்து போட்டியில், கவிபாரதி வித்யாலயா பள்ளி பெண்கள் அணி, இரு பிரிவில், வெள்ளி மற்றும் வெண்கலம் வென்று அசத்தியுள்ளது.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையே, தென்மண்டல கைப்பந்து போட்டி, மதுரை, ஓம் சாதனா சென்ட்ரல் பள்ளியில், ஆக., 24 முதல் 28ம் தேதி வரை நடந்தது. இதில், 100 பள்ளிகளைச் சேர்ந்த, 800 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
அதன்படி, 14 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவு இறுதி போட்டியில், மதுரை, ஓம் சாதனா சென்ட்ரல் பள்ளியுடன், சென்னை, திருவொற்றியூர் - கவிபாரதி வித்யாலயா பள்ளி மோதியது.
இதில், 4 - 7 என்ற புள்ளி கணக்கில், கவிபாரதி வித்யாலயா பள்ளி அணி இரண்டாமிடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் வென்றது. தவிர, 17 வயதிற்குட்பட்ட, மற்றொரு பிரிவில் வெண்கலம் வென்றது.
முதல்வர் கோப்பை அதே போல், செப்., 3, 4ல், சென்னை மாவட்ட அளவிலான, முதல்வர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி, சேத்துபட்டு, நேரு பார்க் - எஸ்.டி.ஏ.டி., விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
இறுதி போட்டியில், கவிபாரதி வித்யாலயா பள்ளி அணி, அம்பத்துார் ஜி.கே., செட்டி விவேகானந்தா வித்யாலயா பள்ளி அணியுடன் மோதியது. அதன்படி, 15 - 14 என்ற புள்ளி கணக்கில், இரண்டாமிடம் பிடித்தது.
அபார திறமையை வெளிப்படுத்திய, கவிபாரதி வித்யாலயா பள்ளி மாணவியரான லக்சா, ஆஷ்லின் கிரேஷி, கயலினி, ரிசந்த்ரா ஆகிய நால்வரும், மாநில போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.