/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இலவச கழிப்பறை படுமோசம் 'பார்க்கிங்'காக மாறிய அவலம்
/
இலவச கழிப்பறை படுமோசம் 'பார்க்கிங்'காக மாறிய அவலம்
இலவச கழிப்பறை படுமோசம் 'பார்க்கிங்'காக மாறிய அவலம்
இலவச கழிப்பறை படுமோசம் 'பார்க்கிங்'காக மாறிய அவலம்
ADDED : பிப் 19, 2024 01:44 AM

அமைந்தகரை:அண்ணா நகர் மண்டலம், அமைந்தகரை என்.எஸ்.கே., சாலையில், சென்னை மாநகராட்சியின் இலவச பொதுக் கழிப்பறை உள்ளது. இதை முறையாக பராமரிக்காததால், கழிப்பறையை சுற்றி தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
இதனால், வாகனங்கள் நிறுத்தும் இடமாக, பொதுக்கழிப்பறை மாறி வருகிறது. மூடப்பட்டுள்ள கழிப்பறையின் வெளிப்புறத்தில் சிறுநீர் கழிப்பதால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. போலீசாரின் எச்சரிக்கை பலகை இருந்தும், சிலர் அத்துமீறி வாகனங்களை கழிப்பறையின் முன் நிறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
அண்ணா நகர் மண்டத்தில் பாழடைந்த கழிப்பறைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த கழிப்பிடத்தை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
ஆனால், இதுவரை எந்த பணிகளும் நடக்கவில்லை. இதனால், சுற்றுப்புறத்தில் வசிப்போர் இங்கு வாகனங்கள் நிறுத்தி, 'பார்க்கிங்' ஆக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட கவுன்சிலர் மற்றும் அதிகாரிகள் கண்காணித்து, கழிப்பறையை முறையாக சீரமைத்து பராமரிக்க வேண்டும். மேலும், அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

