/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சர்வதேச பாய்மர படகு போட்டி: சென்னையில் வரும் 4ல் துவக்கம்
/
சர்வதேச பாய்மர படகு போட்டி: சென்னையில் வரும் 4ல் துவக்கம்
சர்வதேச பாய்மர படகு போட்டி: சென்னையில் வரும் 4ல் துவக்கம்
சர்வதேச பாய்மர படகு போட்டி: சென்னையில் வரும் 4ல் துவக்கம்
ADDED : ஜன 01, 2026 04:36 AM
சென்னை: சென்னை துறைமுகத்தில், 11வது ஆசிய யூத் பாய்மர படகு போட்டி, வரும் 4ம் தேதி துவங்கி, 10ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், இந்தியா உட்பட 13 நாடுகளைச் சேர்ந்த இளம் வீரர்கள் போட்டியிடுகின்றனர்.
இது குறித்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாதன் ரெட்டி கூறியதாவது:
சர்வதேச பாய்மர படகு போட்டி சென்னையில் நடத்துவதும், இந்திய பாய்மர போட்டியில், தமிழக வீரர்கள் அதிகம் இடம் பெற்றிருப்பதும் மகிழ்ச்சி தருகிறது.
இந்த போட்டியைத் தொடர்ந்து, வரிசையாக அடுத்தடுத்த சர்வதேச போட்டிகள், இந்த மாதத்தில் நடைபெற உள்ளன. இந்த போட்டியைப் பொறுத்தவரை, 7 முதல் 17 வயது வரையிலான வீரர்கள் அதிகமாக பங்கேற்க உள்ளனர்.
தமிழக அரசின் உதவியுடன் மெரினா கடற்கரையில், தமிழ்நாடு பாய்மர சங்க கட்டடம் அமைக்க, இந்த மாதம் டெண்டர் கோரப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.