/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீராங்கால் ஓடையில் கான்கிரீட் தடுப்பு சுவர் கட்ட வலியுறுத்தல்
/
வீராங்கால் ஓடையில் கான்கிரீட் தடுப்பு சுவர் கட்ட வலியுறுத்தல்
வீராங்கால் ஓடையில் கான்கிரீட் தடுப்பு சுவர் கட்ட வலியுறுத்தல்
வீராங்கால் ஓடையில் கான்கிரீட் தடுப்பு சுவர் கட்ட வலியுறுத்தல்
ADDED : மார் 14, 2024 12:28 AM

ஆதம்பாக்கம், ஆதம்பாக்கம் ஏரி உபரி நீர் செல்லும் வீராங்கால் ஓடையில், கலங்கலில் இருந்து ஆதம்பாக்கம் வரை ஆக்கிரமிப்பால் சுருங்கியிருந்தது. இதனால், ஒவ்வொரு மழைக்காலத்திலும், குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.
அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், வீராங்கால் ஓடை சீரமைப்பு பணி, 13.90 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த ஆண்டு நடந்தது.
ஓடை பயணிக்கும் வழியில், இடத்திற்கு ஏற்றவாறு 5 மீட்டரில் இருந்து, 14 மீட்டர் அகலம் வரை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தரை மட்டத்தில் இருந்து, 4 மீட்டர் உயரத்திற்கு இருபுறமும், 1,200 மீட்டர் துாரம் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
இப்பணிக்காக வாணுவம்பேட்டை, சிதம்பரம் சாலையில் வீராங்கால் ஓடை செல்லும் சிறு பாலத்தில், தடுப்பு சுவர் அகற்றப்பட்டது.
சிதம்பரம் சாலை வழியாக, தினசரி நுாற்றுக்கணக்கான இரு, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வரும் நிலையில், இங்குள்ள வீராங்கால் ஓடையில் தடுப்பு சுவர் கட்டப்படாமலே உள்ளது.
இதனால், இரவில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிர்பாராதவிதமாக ஓடையில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.
தற்காலிக பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட சவுக்கு மர தடுப்பு சாய்ந்துள்ளது.
தவிர பாலத்தின் ஒருபுறம் குப்பை தொட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள குப்பை தொட்டிகளை அகற்ற வேண்டும். சவுக்கு மர தடுப்புகளை அகற்றி கான்கிரீட் கலவையால் ஆன சுவர் எழுப்ப வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

