/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டு கடன் பெற கண்காட்சி வர்த்தக மையத்தில் துவக்கம்
/
வீட்டு கடன் பெற கண்காட்சி வர்த்தக மையத்தில் துவக்கம்
வீட்டு கடன் பெற கண்காட்சி வர்த்தக மையத்தில் துவக்கம்
வீட்டு கடன் பெற கண்காட்சி வர்த்தக மையத்தில் துவக்கம்
ADDED : செப் 21, 2025 12:36 AM

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், வீட்டு கடன் குறித்த இரண்டு நாள் கண்காட்சி, நேற்று துவங்கியது.
பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான 'கிரெடாய்' இணைந்து, 'நம்ம கனவு இல்லம் - 4.0' என்ற வீட்டு கடன் கண்காட்சியை, சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம் தலைவர் ஷிவ்தாஸ் மீனா நேற்று துவக்கி வைத்தார்.
பின், அவர் பேசியதாவது:
சென்னையில் வீடு வாங்குவோரின் எண்ணிக்கை, கடந்தாண்டு 3 சதவீதம் அதிகரித்து, நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது, நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை உறுதிப்படுத்துகிறது.
வங்கிகள் மற்றும் அவற்றை விளம்பரப்படுத்துவோர், தரமான வீடுகள் மற்றும் அதன் நல்ல திட்டங்கள் குறித்து, மக்களுக்கு உறுதி அளிக்க வேண்டும்.
வீட்டு கடன் வட்டி விகிதங்களில் தளர்வு ஏற்பட்டால், அதை உடனடியாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். வங்கி கடனில் வீடு வாங்குவோருக்கு உரிய ஆவணங்கள் குறித்து முறையாக தெரிவிக்க வேண்டும்.
பத்திரிகைகளில் நிறைய விளம்பரங்கள் வெளியாகின்றன. அதில், 'ரெரா' எனும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் பதிவு எண் மற்றும் க்யூ.ஆர்., குறியீடு ஆகியவற்றை கட்டாயமாகச் சேர்க்க வேண்டும். இது வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, வீடு வாங்குவோருக்கு நம்பிக்கையை அளிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கண்காட்சியில் அங்கீகரிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் வீட்டு கடன் பெறும் வழிமுறை உள்ளிட்டவை குறித்து அறிந்து கொள்ள முடியும். இந்த கண்காட்சி இன்றுடன் முடிகிறது.