/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆட்டோ உதிரிபாகம் ஓட்டேரியில் 'ஆட்டை'
/
ஆட்டோ உதிரிபாகம் ஓட்டேரியில் 'ஆட்டை'
ADDED : பிப் 26, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி:ஷெனாய் நகர், கல்லறை சாலையைச் சேர்ந்தவர் இம்ரான், 37. இவர், ஓட்டேரி - கொன்னுார் நெடுஞ்சாலையில், ஆட்டோ உதிரிபாகங்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 21ம் தேதி இரவு, அவரது கடையின் பூட்டை உடைத்து, பேட்டரி, மோட்டார் உள்ளிட்ட, 50,000 ரூபாய் மதிப்புள்ள உதிரிபாகங்கள் திருடு போயிருந்தன.
இவை குறித்து விசாரித்த ஓட்டேரி போலீசார், ஓட்டேரி, எஸ்.வி.எம்., நகர், 'டி - பிளாக்'கைச் சேர்ந்த பழைய குற்றவாளி ஞானவேல், 38, என்பவரை நேற்று கைது செய்தனர்.

