/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தீ பிடிக்கும் மின் பெட்டிகளால் கிண்டியில் அடிக்கடி மின் தடை
/
தீ பிடிக்கும் மின் பெட்டிகளால் கிண்டியில் அடிக்கடி மின் தடை
தீ பிடிக்கும் மின் பெட்டிகளால் கிண்டியில் அடிக்கடி மின் தடை
தீ பிடிக்கும் மின் பெட்டிகளால் கிண்டியில் அடிக்கடி மின் தடை
ADDED : ஜூலை 25, 2025 12:16 AM

கிண்டி:கிண்டியில் உள்ள மின்பகிர்மான பெட்டிகள் அடிக்கடி தீ பிடிப்பதால், பகுதிமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கிண்டி, ராஜ்பவன் துணைமின் நிலையத்தில் இருந்து, மடுவாங்கரை, திருவள்ளுவர் நகர், நேரு நகர், வண்டிக்காரன் தெரு, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
இப்பகுதிகள், ஒவ்வொரு பருவமழை காலத்திலும் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுவதால், நடைபாதை மற்றும் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்பகிர்மான பெட்டிகளை உயர்த்தி அமைக்க வேண்டும் என, பகுதிமக்கள் பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர்.
லேசான மழை பெய்தால் அப்பகுதியில் தண்ணீர் தேங்கி, மின்தடை ஏற்படுகிறது. இது ஒருபுறமிருக்க, பழுதான கேபிள்களால் மின்மாற்றி, மின் பகிர்மான பெட்டிகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது.
நேற்று, நேரு நகரில் உள்ள ஒரு மின் பகிர்மான பெட்டி தீ பிடித்து எரிந்ததில், அப்பகுதியில் பல மணி நேரம் மின் தடை நீடித்தது.
இதுகுறித்து பகுதிமக்கள் கூறுகையில், 'வாரத்தில் ஐந்து நாட்கள் மின் பகிர்மான பெட்டிகளில் தீ பிடிக்கிறது. பகிர்மான பெட்டிகளை உயர்த்தி அமைக்கவும், பழுதடைந்த கேபிள்களை மாற்றவும், பல ஆண்டுகளாக கூறுகிறோம்.
'அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் நாங்கள் தான் பாதிக்கப்படுகிறோம்' என்றனர்.
மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'புதிய கேபிள், பகிர்மான பெட்டியை உயர்த்தி அமைக்க, உயர் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

